Monday, March 15, 2010

90 சதவீத பக்தர்கள் என்னை நம்புகிறார்கள்: ஆன்மீகப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் சாமியார் நித்யானந்தா பேட்டி


சென்னை, மார்ச். 15-
சுவாமி நித்யானந்தா தற்போது அரித்துவாரில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அங்கு அவர் எங்கு தங்கியிருந்து புனித நீராடி வருகிறார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ரகசிய இடத்தில் தங்கி இருக்கும் அவர் ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-
கேள்வி:- நடிகை ரஞ்சிதாவுடன் நீங்கள் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் உண்மையானதுதானா? அதில் இருப்பது நீங்கள் தானா?
நித்யானந்தா பதில்:- எனக்கு எதிராக நிறைய சதி நடந்துள்ளது. உண்மைக்கு மாறாக தகவல்களை திரித்து வெளியிட்டு விட்டனர். எனக்கு எதிராக மிக அதிகப்படியான வதந்தி பரப்பப்பட்டு விட்டது.

No comments:

Post a Comment