Article from manakkan.blogspot.com
நான் நித்யானந்தா பக்தனோ, பித்தனோ இல்லை. நான் அவரை நேரில் பார்த்தில்லை. அப்படியும் ஒரு தனிமனிதன் தாக்கப்படும் போது சில கேள்விகள் எழாமல் இல்லை
அந்த வீடியோவில் இருப்பது சாமி நித்யானந்தா தானா ? அந்த படம் எடுக்கப் பட்ட போது அவர் சுய நினைவுடன் இருந்தாரா, இது எந்த ஊரில் நடந்தது ? அப்போது சாமி தனியாக பயணம் செய்தாரா (அவர் இபோதெல்லாம் பொதுவாய் பலருடன் மட்டுமே பயணம் செய்கிறார்) , இந்த பெண் கொடுத்த மாத்திரை என்ன போதை அல்லது மயக்க மாத்திரையா ? சன் தொலைக்காட்சி மாரன் குடும்பத்துக்கும் சாமிக்கும் சண்டை இருந்ததா ? அந்த படத்தில் மார்பிங் அது இது என ஏதாவது விளையாடி இருக்கிறார்களா என அடிப்படை ஆதாரங்களை எதிர்த்து பல கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகளுக்கு அரசும், போலீஸும், நாளை சாமி நிதயானந்தாவோ அல்லது வேறு யாராவதோ வழக்கு தொடுத்தால், நீதியும் பதில் சொல்லக் கூடும் . நீதி மன்றத்துக்கு இழுக்கப்ட்டால் ஒழிய மீடியாக்கள் பதில் சொல்வதாய் தெரியவில்லை.
அக்கேள்விகளை இப்போதைக்கு புரம் தள்ளிவிட்டு வேறு சில அடிப்படை கேள்விகளை பார்போம்
Friday, March 19, 2010
Wednesday, March 17, 2010
Monday, March 15, 2010
90 சதவீத பக்தர்கள் என்னை நம்புகிறார்கள்: ஆன்மீகப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் சாமியார் நித்யானந்தா பேட்டி
சென்னை, மார்ச். 15-
சுவாமி நித்யானந்தா தற்போது அரித்துவாரில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அங்கு அவர் எங்கு தங்கியிருந்து புனித நீராடி வருகிறார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ரகசிய இடத்தில் தங்கி இருக்கும் அவர் ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-
கேள்வி:- நடிகை ரஞ்சிதாவுடன் நீங்கள் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் உண்மையானதுதானா? அதில் இருப்பது நீங்கள் தானா?
நித்யானந்தா பதில்:- எனக்கு எதிராக நிறைய சதி நடந்துள்ளது. உண்மைக்கு மாறாக தகவல்களை திரித்து வெளியிட்டு விட்டனர். எனக்கு எதிராக மிக அதிகப்படியான வதந்தி பரப்பப்பட்டு விட்டது.
வதந்தி பரப்புகிறார்கள்: இப்போது நான் என்ன சொன்னாலும் எடுபடாது சாமியார் நித்யானந்தா
சென்னை, மார்ச். 13-
சாமியார் நித்யானந்தா பற்றி வெளியான பரபரப்பு செய்திகளுக்கு அவர் வெளியே வந்து விளக்கம் அளிக்கும் வரை முற்றுப்புள்ளி இருக்காது என்றே எல்லோரும் கருதுகிறார்கள். சாமியாரோ, நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. என் அன்றாட ஆன்மீக கடமைகளை செய்து கொண்டிருக்கிறேன். உண்மைகளை திரட்டி வருகிறேன். விரைவில் எல்லா உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும் என்று சி.டி.யில் தோன்றி விளக்கமளித்தார்.
எங்கு இருக்கிறார் நித்யானந்தா? என்பது தெரியாவிட்டாலும் தினமும் ஆசிரம நிர்வாகிகளோடும், தனது வக்கீல் ஸ்ரீதரோடும் பேசிக்கொண்டிருக்கிறார்.
Subscribe to:
Comments (Atom)
