Showing posts with label godman nityananda. Show all posts
Showing posts with label godman nityananda. Show all posts

Monday, March 15, 2010

வதந்தி பரப்புகிறார்கள்: இப்போது நான் என்ன சொன்னாலும் எடுபடாது சாமியார் நித்யானந்தா


சென்னை, மார்ச். 13-
சாமியார் நித்யானந்தா பற்றி வெளியான பரபரப்பு செய்திகளுக்கு அவர் வெளியே வந்து விளக்கம் அளிக்கும் வரை முற்றுப்புள்ளி இருக்காது என்றே எல்லோரும் கருதுகிறார்கள். சாமியாரோ, நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. என் அன்றாட ஆன்மீக கடமைகளை செய்து கொண்டிருக்கிறேன். உண்மைகளை திரட்டி வருகிறேன். விரைவில் எல்லா உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும் என்று சி.டி.யில் தோன்றி விளக்கமளித்தார்.
எங்கு இருக்கிறார் நித்யானந்தா? என்பது தெரியாவிட்டாலும் தினமும் ஆசிரம நிர்வாகிகளோடும், தனது வக்கீல் ஸ்ரீதரோடும் பேசிக்கொண்டிருக்கிறார்.